வலங்கைமானில் ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் “பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்” – கோரிக்கை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 November 2025

வலங்கைமானில் ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் “பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்” – கோரிக்கை.


வலங்கைமான், நவம்பர் 12:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதலமைச்சர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொகுப்பு ஊதியம் பெற்று ரூ.2000 ஓய்வூதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7850 வழங்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.


மேலும், 21 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உடனே வழங்கப்பட வேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும், அனைவருக்கும் புகைப்படம் மற்றும் வாரிசு விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


அதேபோல், ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை மொத்தமாகப் பெற்றவர்களின் கமிஷன் தொகையை திரும்ப செலுத்தும் காலக்கெடுவை 15 ஆண்டுகளிலிருந்து 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், மத்திய அரசு வழங்கிய 3% அகவிலைப்படியை தமிழக அரசும் உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தலைவர் எஸ். புஷ்பநாதன் தலைமையேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் என். சண்முகம் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் சிவ. செல்லையன், தெய்வ. பாஸ்கரன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரேமா, சித்ரா, மருந்தளுநர் சங்கத்தினர் வி. சாம்பசிவம், வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். மகேஷ், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் என். பிரபு, பி. சிங்காரவேலு, ஜி. ரமேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் வி. நடராஜன், பொதுப்பணித் துறை எஸ். சுவாமிநாதன், வேளாண்மைத் துறை டி. அமிர்த கணேசன், மகாலிங்கம், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் வி. மனோகரி, கூட்டுறவுத்துறை முத்துரெங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி முடிவில், வட்டச் செயலாளர் ஏ. சண்முகம் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad